» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரனோவிற்கு எதிரான போரை மக்கள் பண்டிகைக்காக நிறுத்தி விடக்கூடாது : பிரதமர் மோடி

செவ்வாய் 20, அக்டோபர் 2020 6:56:57 PM (IST)

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து வரும் வரை நாம் அதற்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதில் கொரோனா வைரஸுக்கு எதிராக போரை மக்கள் நீண்ட நாட்களாக செய்து வருவதாக தெரிவித்தார். பொருளாதாரம் மெல்ல மேம்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன் பொறுப்புகளுக்காக அனைவரும் வீட்டிலிருந்து வெளி செல்வதாகவும், பண்டிகை காலம் என்பதால் மார்க்கெட்டுகளும் மெல்ல கலைகட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுமுடக்கம் முடிவிற்கு வந்தாலும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வரவில்லை என்பதை உணர வேண்டும் என்றும், கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்கள் கொடுத்த ஒத்துழைப்பால், இன்று அனைவரும் ஒரு மோசமான நிலையை தவிர்த்திருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் கூறினார்.

வளர்ந்த பிற நாடுகளை விடவும், இந்தியாவில் குறைந்த கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், கொரோனாவிற்கு எதிரான போரில் பரிசோதனைகளை அதிகரித்தது பெரும் பலமாக மாறியதாகவும் பிரதமர் தெரிவித்துக்கொண்டார். பலர் முகக் கவசம் இன்றி அலட்சியமாக இருப்பதை காண முடிவதாகும், அவ்வாறு செல்பவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார். எனவே கொரோனாவை அலட்சியமாக நினைக்காமல், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சோப்புப்போட்டுக் கழுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பண்டிகை காலத்தில் கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory