» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி ’கோவேக்சின்’ எப்போது அறிமுகம்? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்

ஞாயிறு 25, அக்டோபர் 2020 3:57:25 PM (IST)

கோவேக்சின் தடுப்பூசியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்து உள்ளார். 

இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. கோவேக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.   

பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறுகையில், "  அவசர கால ஒப்புதலுக்கு மத்திய அரசு தயாராகலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதுபோன்ற ஒப்புதலுக்கு நாங்கள் முந்திச் செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகள் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட உத்தேசித்துள்ளோம்.அனைத்தும் சரியானபடி நடந்தால் 2021-ல் ஜூன் மாதம் மருந்து வெளியாகும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory