» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்- பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

திங்கள் 26, அக்டோபர் 2020 12:06:28 PM (IST)

"துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்" என பாஜகவுக்கு மகராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். 

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் எனக்கூறினர். நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன்.  துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்.  முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை (மோடிக்கு மாற்று) என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory