» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் முதல் முறை: வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பிய குஜராத் உயர்நீதிமன்றம்

திங்கள் 26, அக்டோபர் 2020 5:48:05 PM (IST)இந்தியாவியே முதல்முறையாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெறும் வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

அதேபோன்று, தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கொரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலும் காணொலி  காட்சி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory