» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது

புதன் 28, அக்டோபர் 2020 3:36:03 PM (IST)

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை கைது செய்தது.  

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.  

அதன் மீது நடந்த விசாரணையில், முன்ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷின் நடவடிக்கைகள் சிவசங்கருக்கு தெரியும் என விசாரணை தரப்பில்  வாதிடப்பட்டது. முன்ஜாமின் மனு தள்ளுபடியானதும், திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory