» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நக்ரோட்டா தாக்குதல்: உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை

வெள்ளி 20, நவம்பர் 2020 3:23:32 PM (IST)

நக்ரோட்டா தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டா பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தினர். அப்போது வாகனத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து, சிஆர்பிஎஃப் படையினரும், காவல் துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மும்பை தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் நிகழ்த்த வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory