» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரானா அச்சுறுத்தல் - குஜராத்தில் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - அரசு அறிவிப்பு
வெள்ளி 20, நவம்பர் 2020 4:25:59 PM (IST)
கரோனா பரவல் காரணமாக, குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை வரும் 23 ஆம் தேதி திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் கரோனா பரவல் வேகம் குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. மேலும் அதற்கான உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை குஜராத் அரசு பிறப்பித்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், கரோனா பரவல் மேலும் அதிகரித்ததை பரிசீலனை செய்த அரசு, வரும் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களை திறக்கும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக்கொலை: ஆந்திராவில் பயங்கரம்!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 4:58:53 PM (IST)

மேற்குவங்கத்தில் பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி
வியாழன் 15, ஏப்ரல் 2021 10:25:00 AM (IST)

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று : புதிய உச்சத்தை தொட்டது கரோனா
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:00:35 AM (IST)

ஹரித்துவாரில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்: கரோனா விதிமுறைகளை காற்றில் பறந்தது!!
வியாழன் 15, ஏப்ரல் 2021 8:55:25 AM (IST)

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)
