» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுகாதார தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும் : பியூஷ் கோயல்

சனி 21, நவம்பர் 2020 10:44:34 AM (IST)

எதிர்காலத்தில் மலிவான மற்றும் புதுமையான சுகாதார தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என ஆசிய சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ஆசிய சுகாதாரம் 2020 மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதார பணியாளர்களின் தியாகம் வீண் போகாது. நம் நாட்டில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி அதி வேகத்தில் நடக்கிறது. தடுப்பூசி கிடைக்கும் வரை, கரோனா தொற்று பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பை வரலாறு நினைவு கூறும். இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உதவியது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஏழை நாடுகள் உட்பட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கரோனா தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் மலிவான மற்றும் புதுமையான சுகாதார தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory