» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாபில் டிச.1-ல் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்: முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு

புதன் 25, நவம்பர் 2020 5:19:35 PM (IST)

பஞ்சாபில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தாலும், தற்போது சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் டவுன்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி ஊரடங்கு நேரம் என்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 15-ம் தேதிக்குப்பின் மறுஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கையை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory