» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிவர் புயல் பாதிப்புகள் : தமிழக முதல்வருடன் அமித் ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்!

வியாழன் 26, நவம்பர் 2020 11:50:21 AM (IST)

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

அதேபோன்று முதல்வர் நாராயணசாமியிடமும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என இரு மாநில முதல்வர்களிடமும் உறுதி அளித்துள்ளார். 

இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுகுறித்து இரு மாநில முதல்வர்களிடம் பேசியதுடன், மத்திய அரசு மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணியில் உள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory