» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை : பிரதமர் மோடி

வியாழன் 26, நவம்பர் 2020 4:40:32 PM (IST)

"நாட்டின் தற்போதைய தேவை ஒரே நாடு ஒரே தேர்தல்; இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து  செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தற்போது இந்தியா பயங்கரவாதத்தை புதிய கொள்கை மற்றும் புதிய முறையில் எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும், அதனை நாடு ஒருபோதும் மறக்காது. நாட்டின் தற்போதைய தேவையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதாக உள்ளது. இது வெறும் விவாதத்துக்குரியதாக மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியத் தேவையாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டேயிருக்கிறது. இதனால் நாட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory