» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 4:35:26 PM (IST)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறிப்பட்டதாவது: இந்த வேளாண் சட்டங்கள் செல்லுபடியாகுமா? என்பது குறித்தும், போராட்டத்தால் மக்களின் உயிரை பாதுகாப்பது, மக்களின் உடைமைகளை பாதுகாப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
எங்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சட்டத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த குழு எங்களுக்கானது. இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த குழுவில் பங்கேற்கலாம். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது. இந்த குழு எங்களிடம் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும்.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரம் அறியவே இந்த குழு அமைத்துள்ளோம். பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து போராடவேண்டுமென விவசாயிகள் நினைத்தால் அவர்கள் போராடிக்கொள்ளலாம்.
இந்த குழு இந்த வழக்கில் ஒரு அங்கம். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் படி மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது. என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்தின் அடிப்படையே பிரதமர் மோடிக்கு புரியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதன் 20, ஜனவரி 2021 11:50:06 AM (IST)

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செவ்வாய் 19, ஜனவரி 2021 3:05:49 PM (IST)

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 13பேர் லாரி ஏறி பலி - பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:03:49 PM (IST)

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சந்திப்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:58:12 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:52:58 PM (IST)

கரோனா தடுப்பூசி வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:45:48 PM (IST)
