» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை

புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமியை வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள கோயில்களில், கோயிலை வலம் வந்த பிறகு, விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிலாக பக்தர்கள் அனைவரும் நின்று கையெடுத்து கும்பிட மட்டுமே செய்யலாம். அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டு வந்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory