» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவ ரகசியம் வெளியானது குறித்து எம்பிக்கள் குழு விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

வெள்ளி 22, ஜனவரி 2021 5:44:54 PM (IST)

பாகல்கோட் பயங்கரவாத குழுக்கள் தங்கியிருந்த இடங்களின் மீது நடந்த அதிரடி தாக்குதல் தொடர்பான செய்தி முன்கூட்டியே வெளியானதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து எம்பிக்கள் குழு மூலம் சோதனை நடத்த வேண்டும் என்று வெள்ளியன்று நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது தேசிய காங்கிரசு தற்காலிக தலைவர் சோனியா காந்தி. அமைச்சராக இருந்த அந்தோணி என்னிடம் குறிப்பிட்டார். இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே செய்தி வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அரசு அமைதி காக்கிறது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே செய்தி வெளியானதாக கூறப்படுகின்ற தகவல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியது. 

மத்திய அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்துகின்றது. விவசாயிகள் அமைப்புக்கு காங்கிரஸ் ஏகமனதாக ஆதரவு அளிப்பதாகவும் மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்று விவசாய சட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று அகில இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்தப் பெரும் தொகை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பாதிப்புகள் மறைய இன்னும் பல ஆண்டுகள் காலம் ஆகும்.

கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நமது விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உரிய நேரத்தில் தயாரித்து வழங்க தொடங்கியுள்ளன இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவத் துறையில் இருக்கும்காங்கிரஸ் நிர்வாக கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் பொதுமக்களும் இந்த தடுப்பூசி மருந்துகளை பெருமளவில் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கேட்டுக்கொள்கிறது. இந்த தீர்மானங்களை காங்கிரஸ் காரியக் கமிட்டி நிறைவேற்றுவதற்கு முன்னாள் முன்னதாக தீர்மானங்கள் குறித்து காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி அவற்றின்மீது பேசினார்.  அப்போது மத்திய அரசைக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் பொருளாதார சூழலில் மிகவும் மோசமான மோசமானதாக உள்ளது என்று சோனியா காந்தி குறிப்பிட்டார். குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில்கள் கிட்டத்தட்ட மத்திய அரசினால் அழிக்கப்பட்டுவிட்டன காங்கிரஸ். மத்திய அரசு பேருக்காகவும் ஆடம்பரத்துக்காக போம்பல திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகிறது. எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவ எந்த திட்டத்தையும் வகுத்து அமல் செய்யவில்லை அதேபோல சுற்றுச்சூழல் சட்டங்களையும் தொழிலாளர் துறை சட்டங்களையும் கிட்டத்தட்ட அரசு நாசம் செய்து விட்டது.

மத்திய அரசு பீதி கலந்த வெறியோடு தனியார் மயமாக்கல் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இத்தகைய தனியார்மயமாக்கல் திட்டங்களை காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் ஒருபோதும் முன்வைப்பதும் இல்லை ஆதரிப்பதும் கிடையாது என்று சோனியா தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடக்கும் தேர்தலோடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இன்று உடன்பாடு எட்டப்படவில்லை.

காங்கிரஸ் தேர்தல் ஆணையத்துடன் பேசிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலை அசாம், மேற்கு வங்காளம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்த பிறகு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து

உண்மை தமிழன்Jan 23, 2021 - 05:36:27 PM | Posted IP 162.1*****

ஈழத்தில் போர் நடப்பது உண்மை தெரிந்ததும் தீம்கா இத்தாலி காங்கிரஸ் பயலுக கும்னு இருப்பாங்க..

arunJan 23, 2021 - 10:47:53 AM | Posted IP 108.1*****

thidir thesapaktharkal enge ponarkal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory