» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி

சனி 23, ஜனவரி 2021 3:25:26 PM (IST)

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அவருடன் இருந்த சசிகலாவுக்கு கரோனா பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இளவரசிக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கும் கரோனா பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 20-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கரோனா பாதித்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கும் கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுளள்து. இதையடுத்து இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக, ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.கே. சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்து தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் மூத்த மருத்துவா்கள் கொண்ட குழு, சசிகலாவின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். 

ஏற்கெனவே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, ஹைபோ தைராடிசம் பிரச்னைகள் உள்ளதால் சசிகலாவை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றுமாறு அவரது உறவினா்கள் விடுத்த கோரிக்கையை சிறைத் துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனா். அவா் இன்னும் சிறைக் கைதியாக உள்ளதால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory