» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு

சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இந்திய தேசிய ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவம் என்றொரு அமைப்பினை உருவாக்கி அதில், குஜராத், வங்காளம் மற்றும் தமிழகம் உள்பட ஒவ்வொரு மக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டார்.  பிரிட்டிஷாரின் நம்மை பிரித்து, ஆட்சி செய்யும் கொள்கைக்கு எதிராக நின்றவர் என்று கூறினார்.

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் கட்டாயம் தேவை.  இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு இந்தியா முழுவதும் ஆட்சி செய்தனர்.  நம்முடைய நாட்டில் ஏன் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். தேசநாயகர் தினம் என்று நாம் இன்று கொண்டாடி வருகிறோம்.  ஏனெனில் நேதாஜியை ரவீந்திரநாத் தாகூர் தேசநாயகர் என அழைத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory