» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்ள கர்நாடக அரசு அனுமதிக்காது: எடியூரப்பா
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:55:48 AM (IST)
காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்தி கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என்று முதல்-அமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, காவிரி ஆற்றின் உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிடும் விதமாக இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் முதல்-அமைச்சர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
"காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை. காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை. எனது தலைமையிலான அரசு, அதற்கு வாய்ப்பளிக்காது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழ்நாடு நடந்து கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் அவர்கள் கூறும் கருத்துகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூற வேண்டும் என்பது அவசியமில்லை. இதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். இது தொடர்பாக யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தற்போதைக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” இவ்வாறு முதல்-அமைச்சர் எடியூரப்பா கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசி
திங்கள் 1, மார்ச் 2021 11:00:48 AM (IST)

பி.எஸ்.எல்.வி. சி-51 விண்ணில் பாய்ந்தது : இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரேசில் அமைச்சர் புகழாரம்
திங்கள் 1, மார்ச் 2021 10:39:31 AM (IST)

உலகின் மிக தொன்மையான தமிழை சரியாக கற்க முடியவில்லை: பிரதமர் நரேந்திர மோடி உரை!!
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:54:52 PM (IST)

குஜராத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு : 4 நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு அமல்!!
சனி 27, பிப்ரவரி 2021 5:03:13 PM (IST)

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:45:27 PM (IST)

கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:25:13 PM (IST)

ராமநாதபூபதிFeb 23, 2021 - 09:49:55 AM | Posted IP 108.1*****