» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:25:13 PM (IST)

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போடும் முதற்கட்டப் பணியை கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 1.30 கோடிக்கும் அதிகமான முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு அதிகமானோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோ-வின் செயலியில் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory