» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை: மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

வியாழன் 8, ஏப்ரல் 2021 10:57:18 AM (IST)

கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் கரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

கை தட்டு , விளக்கு புடிApr 9, 2021 - 09:06:37 AM | Posted IP 162.1*****

மோடி பக்தர்களே போய் கை தட்டுங்க , விளக்கு பிடிக்கவும்

குபேரன்Apr 8, 2021 - 12:25:31 PM | Posted IP 162.1*****

ஆமா நீங்க எப்போ ரிவர்ஸ் கியர் ல இருந்து Forward கியர் போட்டு நாட்ட முன்னேற்ற போறீங்க? உங்க திறமையில் ரொம்ப பின்னாடி போய் விட்டது இந்தியா. Gear விழ மாட்டேன் என்று அடம் பிடித்தால் காங்கிரஸ் யிடம் கொடுத்து விட்டு Rest எடுங்கள் Please.... அவர்கள் எப்போதும் Forward கியர் ல தான் நாட்டை யிட்டு செல்வார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory