» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள மாநிலத்தில் பொது முடக்கத்தை மே 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

வெள்ளி 14, மே 2021 7:38:50 PM (IST)

கேரள மாநிலத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை மே 23ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 8 தேதி கேரளத்தில் 9 நாள்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வர இருந்தநிலையில் அதனை மேலும் நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மே 23 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கேரள அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளித்துள்ளது. 

மேலும் கரோனா அதிகம் பாதித்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory