» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பிரதேசத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு அரசு உதவி

வெள்ளி 14, மே 2021 8:48:00 PM (IST)

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்திலும் அவர்களது பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் செளகான் இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பத்திரிகையாளர்களும் கரோனா முன்களப்பணியாளர்கள் தான் என மபி முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory