» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பது தேச துரோகம் இல்லை : உச்ச நீதிமன்றம் அதிரடி

வெள்ளி 4, ஜூன் 2021 11:20:35 AM (IST)

அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பது தேச துரோகம் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

பிரபல பத்திரிகையாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான வினோத் துவா யூடியூப் செய்தி ஒன்றில் தெரிவித்த கருத்துக்காக அவர் மீது பாஜக தலைவர் ஒருவர் தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி லலித் இந்த உத்தரவை பிறப்பித்தார். 

தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் 1962ஆம் ஆண்டு கேதார் நாத் சிங் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டினார் .அரசு மற்றும் அரசு அமைப்புகளின் சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு துயரங்களைக் குறைப்பதற்காக சட்டப்பூர்வமான வழியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் - பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளும் வன்முறை நடவடிக்கைகளும் நீங்கலாக தேசத்துரோக செயல்களாக கருதக்கூடாது. கேதார்நாத் சிங் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் பாதுகாப்புக்கு உரியவர் ஆகிறார் என்று லலித் குறிப்பிட்டார். 

இந்தியன் பீனல் கோடு 124 ஏ பிரிவு, சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்டு செயல்படும் அரசை சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பதவி இறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தான் தேசவிரோத செயல்களாக கருதப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தி உள்ளது. சமீப காலத்தில் அரசின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும்  எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்காக  தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யும் போக்கு தலைதூக்கியுள்ளது நீதிபதி லலித் எச்சரிக்கை செய்தார்.

மத்திய மாநில அரசுகள் பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் பொதுநல ஊழியர்கள் மீது தொடரப்பட்ட பல தேசத்துரோக வழக்குகள் நீதிபதிகள் கேதார்நாத் சிங் மற்றும் லலித் வழங்கிய தீர்ப்புகள் காரணமாக ரத்து செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.வினோத் துவா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் நியாயமான விமர்சனம் ஒருபோதும் தேசத்துரோக குற்றம் ஆகாது என்று தனது விவாதத்தின் போது குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory