» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருட்களை வழங்க வேண்டும் இந்தியா வலியுறுத்தல்

வெள்ளி 4, ஜூன் 2021 11:34:09 AM (IST)

பைசர், ஜான்சன் & ஜான்சன், மாடெர்னா   கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான பொருள்களை தடையில்லாமல் வழங்க  உலக சுகாதார நிறுவன மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஷிரிங்க்லா கோரிக்கை முன்வைத்தார்.

பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடெர்னா   ஆகிய கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்வரும் படி அரசு சார்பில் இந்த நிறுவனங்களுடன் ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் குறிப்பிட்டார்.  ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தேவையான இடுபொருள்கள்  பல நாடுகள் உற்பத்தியாகிறது. அந்தந்த நாடுகளில்  தயாரிக்கப்படும் கச்சாப் பொருட்களை இந்தியாவுக்கு தேவையான அளவில் வழங்க முன்வரவேண்டும். கரோனா தடுப்பூசி மருந்துகளை உற்பத்தியை பொருத்தமட்டில் அதிக அளவில் முற்றிய மேடையாக உருவாக வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது இதற்கான பேச்சுவார்த்தைகள் ஜி 7, ஜி 20, குவாத், ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றில் நடைபெற்று வருகின்றன என்றுஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory