» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள்: 50% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

ஞாயிறு 13, ஜூன் 2021 9:27:36 PM (IST)

புதுதில்லியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகளை டெல்லி அரசு அனுமதித்துள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்குவதற்கும் ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு  பயணிகளுடன் இயங்கவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதியளித்துள்ளார்.

டெல்லியில் வாராந்திர சந்தைகள் நாளை முதல் திறக்கப்படும், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரே ஒரு சந்தை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்

*அரசு அலுவலகங்களில் பிரிவு ஏ அதிகாரிகள் 100 சதவீதமும், மற்ற பிரிவுகளில் 50 சதவீத அலுவலர்களும் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய சேவைகள் தொடரும்.

*தனியார் அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் அனைததும் காலை 10:00 மணி முதல், இரவு 8 மணி வரையிலும் செயல்படலாம்.

*கோவில்களை திறக்கலாம். ஆனால், பக்தர்ளுக்கு அனுமதி கூடாது.

என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தடை தொடரும்

* பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கிடையாது.

* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு தடை நீடிக்கும்

* நீச்சல் குளங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்குகள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.

* அழகு நிலையங்கள், ஜிம்கள், யோகா நிலையங்கள், பூங்கா, தோட்டங்கள் மூடப்பட்டிருக்கும்.

* ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.

வீடுகளில் மட்டும் திருமணத்திற்கு அனுமதி கிடைக்கும். அதில் 20 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

இவ்வாறு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory