» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2020-21ஆம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி வங்கி வாராக்கடன்கள் தள்ளுபடி

திங்கள் 14, ஜூன் 2021 8:46:59 AM (IST)

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.

ஒவ்வொரு நிதியாண்டிலும் வசூல் செய்ய முடியாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றன. வாராக்கடன்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்களில் 2-ஆவது அதிகபட்சத் தொகையாகும். 

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருந்தன. கடந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை பெருநிறுவனங்கள் பெற்ற கடன்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, கடந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் 55.65 சதவீதமானது கடைசி காலாண்டில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்ததில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னிலையில் உள்ளது. யெஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பஞ்சாப்-சிந்து வங்கியின் வாராக்கடன் தள்ளுபடி கடந்த நிதியாண்டில் குறைந்துள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.1,781 கோடி மதிப்பிலான வாராக்கடன்களை அந்த வங்கி தள்ளுபடி செய்திருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.70.51 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த மாா்ச் மாத நிலவரப்படி வங்கிகளின் வாராக்கடன் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இது கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் ரூ.6.8 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்

எஸ்பிஐ-ரூ.34,403 கோடி

யெஸ் வங்கி-ரூ.17,208 கோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி-ரூ.15,877 கோடி

பரோடா வங்கி-ரூ.14,878 கோடி

ஆக்சிஸ் வங்கி-ரூ.13,906 கோடி

ஐசிஐசிஐ வங்கி-ரூ.9,608 கோடி

யுசிஓ வங்கி-ரூ.9,411 கோடி

சென்ட்ரல் ஃபேங்க்-ரூ.5,992 கோடி

நிதியாண்டுகள் வாரியாக...

நிதியாண்டுகள் வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்

2017-18: - ரூ.1.44 லட்சம் கோடி

2018-19: - ரூ.2.54 லட்சம் கோடி

2019-20: - ரூ.1.45 லட்சம் கோடி

2020-21: - ரூ.1.53 லட்சம் கோடி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory