» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் ஒருபோதும் பொதுமக்களுக்கு உதவாது: ராகுல் காந்தி

திங்கள் 14, ஜூன் 2021 5:18:28 PM (IST)

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார் மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தனியார்மயமாக்கல் இயக்கத்தை நடைமுறைப்படுத்தி வரும் மத்திய அரசு நடப்பு நிதியாண்டிலும் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்பட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது. மாறாக, 2019 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காங்கிரஸின் 'குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்ட'த்தை கொண்டு வாருங்கள். அந்த திட்டத்தால் மக்களுக்கு உதவ முடியும் என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory