» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் அதிகரிக்கும் வரதட்சணைக் கொடுமை : ஒரே வாரத்தில் 3 இளம் பெண்கள் மரணம்!

வியாழன் 24, ஜூன் 2021 11:25:10 AM (IST)

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் ஒரே வாரத்தில் 3 இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர்  என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார்  வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். 

விஸ்மயாவை  அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா  பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார்  குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே விஸ்மயா தற்கொலை வழக்கு கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்ற 24 வயது பெண் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.   மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அர்ச்சனாவை  அவரது கணவர்  சுரேஷ்  தற்கொலைக்கு தூண்டியதாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அர்ச்சனாவுக்கும் சுரேஷுக்கும் காதலித்து  திருமணம்  செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. 

இதபோல் ஆலப்புழாவில் உள்ள வல்லிகுன்னத்தில் உள்ள கணவரின் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை சுசித்ரா (19)  என்ற  இளம் பெண் இறந்து கிடந்தார். இவரது கணவர் விஷ்ணு ராணுவ வீரர் இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 21 ந்தேதி திருமணம் நடந்து உள்ளது. திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, விஷ்ணு உத்தரகாண்டிற்கு சென்று உள்ளார்.  கணவர் குடும்பத்தினரின் வரதட்சனை கொடுமையால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory