» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆங்கிலமுறை மருத்துவத்தை அவமதித்ததாக வழக்கு : டெல்லிக்கு மாற்றக்கோரி பாபா ராம்தேவ் மனு!

வியாழன் 24, ஜூன் 2021 5:25:57 PM (IST)

ஆங்கில முறை மருத்துவத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட எல்லா வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோரி பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு பதஞ்சலி என்ற பெயரில் பாபா ராம்தேவ் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதைத்தவிர பல்வேறு நவீன தினசரி வாழ்க்கைக்கு உதவும் பற்பசை. சேவிங் கிரீம். ஷாம்பு ஆகியவைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கரோனா வைரஸ் தொற்றை போக்குவதற்காக அவர் ஆயுர்வேத மருந்து தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த மருந்து தொகுப்பு தொடர்பாக பேசும்பொழுது ஆங்கில முறை வைத்து விட்டால் பல லட்சம் பேர் உயிர் இழந்து விட்டார்கள் அது ஒரு ஸ்டுப்பிட் வைத்தியம் என்று கூறியதாக விடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கில முறை வைத்தியர்கள் பாபா ராம்தேவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள். பாபா ராம்தேவ் தான் கூறிய கருத்தை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனர் தலைவர் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு என்று பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்ற விவரத்தை உச்சநீதிமன்ற பதிவாளர் இன்னும் வெளியிடவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory