» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகை புகைப்படத்துடன் ஆசிரியர் தகுதி சான்றிதழ் வெளியீடு : பிகாரில் சர்ச்சை!!

வெள்ளி 25, ஜூன் 2021 5:33:16 PM (IST)



பிகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் பிரபல நடிகை அனுபமாவின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 37 ஆயிரம் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிகாரில் நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் முறை மூலம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிகாரில் கடந்த மார்ச் 12ஆம் தேதி 12 பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் எஞ்சிய 3 பாடத்திட்டங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஜூன் 21ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வுகள் முடிவுகள் மீது தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

பிகாரின் ஜெகநாபாத் பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் குமார் என்பவர் பிகார் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் பிகார் பள்ளி தேர்வு வாரியம் வெளியிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் அவர் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

எனினும் அவரது சான்றிதழில் அவரது புகைப்படத்திற்கு மாற்றாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை அனுபமாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரிஷிகேஷ் குமார் புகாரளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிகார் பள்ளி தேர்வு வாரியம் கணினியை கையாள்பவரின் கவனக்குறைவினால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory