» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலி தடுப்பூசி போட்டதால் நடிகை மிமிக்கு உடல் நலக்குறைவு: குற்றவாளி மீது கொலை வழக்கு

ஞாயிறு 27, ஜூன் 2021 9:54:53 AM (IST)



போலி தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான மிமி சக்ரவர்த்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் தேபன்ஜன் தேப் என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி பல இடங்களில் போலி தடுப்பூசி முகாம் நடத்தி உள்ளார். இதன் மூலம், 1 கோடி வரை சுருட்டிய அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.  இவர் நடத்திய ஒரு போலி தடுப்பூசி முகாமில் ஜாதவ்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி கடந்த 4 நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மிமிக்கு திடீரென உடலில் நீர்ச்சத்து குறைந்து, வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், ரத்த அழுத்தம் குறைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மிமி தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதாக அவர்கள் கூறினர். ஏற்கனவே, மிமிக்கு பித்தப்பை, கல்லீரல் தொடர்பான நோய்கள் உள்ளன. கைதான தேப், அவரது போலி முகாமில் கொரோனா தடுப்பூசி என பாக்டீரியாவுக்கு எதிராக செயல்புரியும் அமிகாசின் மருந்தை ஊசி மூலம் செலுத்தி உள்ளார்.  இந்த மருந்து அலர்ஜி உள்ளவர்களுக்கு அமிகாசினை செலுத்தினால் மிக மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. எனவே, தேபன்ஜன் தேப் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க முதல்வர் மம்தா பானர்ஜி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory