» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் அபிமானி நான் : பிரதமர் மோடி பெருமிதம்

ஞாயிறு 27, ஜூன் 2021 7:51:04 PM (IST)

உலகின் பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.  இன்று நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழி உலகின் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த மொழி என்று கூறியுள்ளார்.

உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் மாறாதது.  பழமையான தமிழ் மொழி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் இதை எண்ணி பெருமைகொள்ள வேண்டும். தமிழ் மொழியை எண்ணி நான் எப்போதும் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன் என்று பேசியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory