» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லையோர கிராமங்களின் பெயர்களை மாற்றக் கூடாது: கேரள முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்!

செவ்வாய் 29, ஜூன் 2021 12:18:34 PM (IST)

எல்லையோர கிராமங்களின் பெயர்களை மாற்றக் கூடாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கேரளா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா- கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது காசர்கோட் மாவட்டம். இந்த மாவட்டம் கேரளாவில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னடம் பேசும் அதிகமான மக்கள் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகள் சில கிராமங்களின் பெயரை மாற்றியுள்ளன.

கேரள உள்ளாட்சி அமைப்புகள் மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம், மல்லா என்பதை மல்லம் என மாற்றியுள்ளது.  கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா , கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு இவ்விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்  காசர்கோட் மற்றும் மன் ஜேஸ்வர மாவட்டத்தில் கர்நாடக எல்லையில் இருக்கும் கிராமங்களின் பெயர்களை மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory