» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐரோப்பிய யூனியனில் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்க நடவடிக்கை: சீரம் நிறுவனம் கோரிக்கை
செவ்வாய் 29, ஜூன் 2021 12:24:57 PM (IST)
ஐரோப்பிய யூனியனில் தடுப்பூசி பாஸ்போர்ட்டில், கோவிஷீல்டு தடுப்பூசியை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இந்தியா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியின் இறுதியில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.
எனவே, ஐரோப்பிய யூனியனின் தடுப்பூசி பாஸ்போர்ட்டில் கோவிஷீல்டு இணைக்கப்படாதது, மாணவர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இது உலக அளவில் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்ப்பதாக அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
