» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் ஆலோசனை
செவ்வாய் 29, ஜூன் 2021 5:16:02 PM (IST)

ஜம்மு விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா். இந்த தாக்குதல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், லாடகிற்கு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், லடாகில் உள்ள நிலவரம் குறித்தும் விவரிக்கவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

பெண்களின் ஆபாச ஏஐ வீடியோ, படங்களை நீக்க வேண்டும்: எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!
சனி 3, ஜனவரி 2026 3:37:12 PM (IST)

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலுநாச்சியார்: பிரதமர் மோடி புகழாரம்!
சனி 3, ஜனவரி 2026 11:06:20 AM (IST)

