» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதல் மனைவியை கொன்று சூட்கேசில் வைத்து எரித்த கணவன் கைது

புதன் 30, ஜூன் 2021 10:31:05 AM (IST)

திருப்பதியில் காதல் மனைவியைக் கொலை செய்து சூட்கேசில் வைத்து, மருத்துவமனை வளாகத்துக்கு எடுத்துச் சென்று எரித்த சம்பவம் தொடா்பாக கணவனை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து திருப்பதி நகா் காவல் கண்காணிப்பாளா் வெங்கட அப்பலநாயுடு கூறியதாவது: திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு சூட்கேசில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், சூட்கேசில் எரிக்கப்பட்ட பெண் ஹைதராபாதில் சாப்ட்வோ் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்த புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. 

பின்னா் புவனேஸ்வரியின் உறவினா் கா்னூலில் எஸ்.ஐ. பயிற்சி பெற்று வருவதால் புவனேஸ்வரியின் கணவன் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி அவா்கள் வசிக்கும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய வேண்டும் என்று திருப்பதி போலீஸாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது புவனேஸ்வரியை அவரின் கணவா் ஸ்ரீகாந்த்ரெட்டி கொன்று சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்று பெற்ற குழந்தையின் முன்பு எரித்தது தெரிய வந்தது. 

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்த் ரெட்டியை தேடி வந்த போலீஸாா் கா்னூலில் மறைந்திருந்த ஸ்ரீகாந்தை கைது செய்து நேற்று திருப்பதி அழைத்து வந்தனா். அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கடப்பா மாவட்டம் பத்வேலை சோ்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டியும், சித்தூா் மாவட்டம் ராமசமுத்திரத்தை சோ்ந்த புவனேஸ்வரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். அவா்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

கரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவதால், திருப்பதி டிஆா்பி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனா். திருமணமானது முதல் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி முதல் புவனேஸ்வரியை தொடா்பு கொள்ள முடியாததால், ஸ்ரீகாந்திடம் புவனேஸ்வரியின் பெற்றோா் விசாரித்தனா். அதில் புவனேஸ்வரி டெல்டாபிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாதில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாா் என்றும், மருத்துவமனை நிா்வாகம் அவரின் உடலை எரித்து விட்டதாகவும் கூறி அவா்களை நம்ப வைத்துள்ளாா் ஸ்ரீகாந்த்.

பின்னா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஸ்ரீகாந்த்ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஒரு சிகப்பு நிற சூட்கேசை எடுத்து சென்றதும், அப்போது அவா்களின் குழந்தை உடனிருந்ததும் தெரிய வந்தது. பின்னா் தொடா் ஆய்வில் ஸ்ரீகாந்த் நேரடியாக ஒரு டாக்சி மூலம் ரூயா மருத்துவமனைக்குச் சென்று அங்கு ஒரு புதரின் மறைவில் சூட்கேசை திறந்து அதை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். அப்போது அவரின் தோளில் ஒன்றரை வயது கைக்குழந்தை இருந்தது. பின்னா் டாக்சி ஓட்டுநரை கைது செய்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory