» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை வரி, காசோலைக்கு கட்டணம்: எஸ்பிஐ அறிவிப்பு
புதன் 30, ஜூன் 2021 10:45:07 AM (IST)
ஏடிஎம் அல்லது கிளைகளில் இருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளைமுதல் அமலுக்கு வருகிறது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் BSBD வங்கிகணக்குகளில் எஸ்பிஐ ஏடிஎம்கள் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5-வது பரிவர்த்தனை முதல் சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். இந்த வகை வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால் 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
ஏடிஎம் இயந்திரத்தில் பாஸ்வோர்டு மாற்றுவது போன்ற நிதியல்லாத சேவைகளுக்கு கட்டம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவச நிதியற்ற சேவைகளுக்கு எவ்விதமான மாற்றமும் இல்லை. உதாரனாக ஏடிஎம் இயந்திரத்தில் பாஸ்வோர்டு மாற்றுவது போன்றது.மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை நாளை முதல் (ஜூலை 1-ம் தேதி முதல்) அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)

ஏமனில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிமிஷா : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 10, ஜூலை 2025 12:44:26 PM (IST)

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை: பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 8பேர் மீது வழக்கு
வியாழன் 10, ஜூலை 2025 12:23:40 PM (IST)

வதோதராவில் பழமை வாய்ந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 13 பேர் பலி
வியாழன் 10, ஜூலை 2025 8:02:50 AM (IST)

நிலச்சரிவில் வீடுகள் தரைமட்டம்: 67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
புதன் 9, ஜூலை 2025 5:51:49 PM (IST)

ஆறாம் வகுப்பு மாணவர்களில் 47% பேருக்கு வாய்ப்பாடு தெரியவில்லை : ஆய்வில் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:19:52 AM (IST)
