» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரீசார்ஜ் முறையில் மின்கட்டணம் செலுத்தும் திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதன் 30, ஜூன் 2021 5:44:27 PM (IST)

மின் நுகர்வோர் மின்கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் முறை கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டுவரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்க ரூ.19,041 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory