» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
வியாழன் 1, ஜூலை 2021 8:44:48 AM (IST)
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை அரசு அளித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி இருபாலரிடையேயும் நல்ல பலனை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு, பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
மலட்டுத் தன்மை விவகாரம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தங்களது வலைதளத்தில் பதிலளித்து வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மலட்டுத் தன்மை ஏற்பட்டதாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசிகள் முதலில் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மனிதர்களிடையேயும் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே சந்தையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளித்தது.
கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை பரிசோதனை செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கரோனா நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரும் மருத்துவருமான என்.கே.அரோரா கூறியதாவது, போலியோ தடுப்பு மருந்து போடும்போதும் இதுபோன்ற வதந்திகள் பரவின. போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மலட்டுத் தன்மையை சந்திப்பார்கள் என்று வதந்தி பரவியது. எந்தவொரு தடுப்பூசியும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. எதிலும் இதுபோன்ற மிகப்பெரிய பிரச்னைகளுக்கு காரணமான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)
