» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

வியாழன் 1, ஜூலை 2021 12:12:37 PM (IST)

இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசிக்கான 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், அதற்கான அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மறுத்துள்ளது. 

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சில நாள்களுக்கும் முன்பு தான் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்புட்னிக் லைட் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory