» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம்: ப.சிதம்பரம் விமர்சனம்!
வியாழன் 1, ஜூலை 2021 5:30:06 PM (IST)
சமையல் எரிவாயு விலை உயர்வு மோடியால் சாத்தியம் என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கத்துக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 100-ஐ கடந்துள்ளது. இதையடுத்து மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒரு உருளை ரூ. 834.50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த நவம்பர், 2020 முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு மோடியால் சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், மோடியின் அரசின் சமையல் எரிவாயு உருளை விலைகள் -2020 முதல் 2021 வரை:
நவம்பர் 30, 2020: ₹594
டிசம்பர் 1, 2020: ₹644
ஜனவரி 1, 2021: ₹694
பிப்ரவரி 4, 2021: ₹719
பிப்ரவரி 15, 2021: ₹769
மார்ச் 1, 2021: ₹819
ஜூலை 1, 2021: ₹834 எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து தவறாக மொழிபெயர்ப்பு... சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
வெள்ளி 18, ஜூலை 2025 11:50:54 AM (IST)

மருத்துவமனைக்குள் புகுந்து பரோல் கைதி சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்!
வெள்ளி 18, ஜூலை 2025 11:04:25 AM (IST)

பீகாரில் 125 யூனிட் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை : முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:57:30 AM (IST)

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!
வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)
