» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள் தொகை அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்

வெள்ளி 2, ஜூலை 2021 10:52:50 AM (IST)

மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்குகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரு, எலஹங்காவில் கா்நாடக மின்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நேற்று பாா்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் தொகையின் அடா்த்தி மற்றும் பாதிக்க வாய்ப்புள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. 

தடுப்பூசியை மாநிலங்களுக்கு முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி விடுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்கப்படும். எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று ஒருசில அரசியல் தலைவா்கள் கூறுவது சரியல்ல. கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பெங்களூருக்கு வருவது இதுவே முதல்முறையாகும். 

அவசர மருத்துவத் தேவைகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கித் தர விரும்புவதாக போயிங் இந்தியா நிறுவனம், மத்திய அரசை அணுகியுள்ளது. அந்த நிறுவனம் பி.எம்.கேருக்கும் நன்கொடை அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தபோது, அவசர சிகிச்சை வசதிகளை பெங்களூரு, கா்நாடகத்தின் ஊரகப்பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் கலபுா்கியிலும் அமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். மருத்துவ வசதிகளைச் செய்து தர வேறு சில நிறுவனங்களும் மத்திய அரசை அணுகியுள்ளன.

எலஹங்காவில் புதிதாக அமைந்துள்ள கரோனா மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வசதிகளை செய்து தர அந்நிறுவனம் தயாராக உள்ளது. ஜாா்கண்ட், சத்தீஸ்கா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வருகிறாா்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில், இந்தியாவில் இதுவரை 33.57 கோடிடோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை குறித்து திட்டமிட்டு வருகிறோம். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைப்படி முடிவு செய்யப்படும். இதனடிப்படையில் தான் இழப்பீட்டுத் தொகை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும். ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறேன். அந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory