» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் நீட் குறித்து பேசவில்லை: டெல்லியில் எல்.முருகன் பேட்டி

சனி 3, ஜூலை 2021 5:22:31 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழக பாஜக எம்எல்ஏக்கள் நீட் குறித்து எதுவும் பேசவில்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி. சரஸ்வதி ஆகியோர் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர்  இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன் கூறியதாவது: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் 4 பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது என எதிர்க்கட்சிகள் கூறியதை முறியடித்து தற்போது சட்டமன்றத்தில் தூண்களாக உள்ளோம். இதையடுத்து இன்றுபிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

அப்போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் ராமேஸ்வரம், மகாபலிபுரம், தஞ்சை உள்ளிட்ட ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஆகியவை குறித்தும் ஆலோசனையின் போது பேசப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினைவாத செயல்பாடுகளையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இதில் உச்ச நீதிமன்றதின் தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து கண்டிப்பாக விலக்கு பெற முடியாது என தெரிந்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வரப்பட்டது. அதனால் தான் நாங்கள் நீட் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை.

நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள குழுவானது அதில் இருக்கும் சாதகங்களை கேக்கமால், பாதங்களை மட்டுமே கேட்டு வருகின்றது. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதனை கேட்ட அவர் தடுப்பூசி குறித்த புள்ளி விவரங்களை கணக்கெடுத்து ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அதேபோன்று மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் எங்களிடம் அறிவுறுத்தினார் என்று எல்.முருகன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory