» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் வழங்கியதில் ஊழலா? பிரான்சில் விசாரணை துவக்கம்!

திங்கள் 5, ஜூலை 2021 12:18:48 PM (IST)

இந்திய விமானப் படைக்கு, ரபேல் ரக போர் விமானங்கள் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக பிரான்சின் தேசிய நிதி நடவடிக்கை அலுவலகம் விசாரணையை துவங்கியுள்ளது 

இந்திய விமானப் படைக்கு, பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதற்கான 59 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.எந்த முறைகேடும் நடக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இருப்பினும், 2019 லோக்சபா தேர்தலில் இதை முன்வைத்து, ராகுல் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிலருக்கு சாதகமாக நடந்து கொள்ளப்பட்டது குறித்தும் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்தும், பிரான்சின் பி.என்.எப்., எனப்படும் தேசிய நிதி நடவடிக்கை அலுவலகம் விசாரணையை துவங்கியுள்ளது என, பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன .பிரான்சின் புலன் விசாரணை இணைய இதழான, மீடியாபார்ட் மற்றும் ஷெர்பா என்ற அரசு சாரா அமைப்பும் கொடுத்த புகார்களின்படி, நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளியிட்டும், பி.என்.எப்., முன்னாள் அதிகாரி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும், செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது: இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதை உறுதி செய்யும் வகையில், பிரான்சில் விசாரணை துவங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் நாட்டுக்கு தெரிய வேண்டும். பாராளுமன்ற  கூட்டு குழு விசாரணைக்கு, பிரதமர் மோடி முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர்சம்பித் பாத்ரா கூறியுள்ளதாவது: பிரான்சில் இரண்டு அமைப்புகள் கொடுத்த புகாரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் புகார் கொடுத்தால், அதன் மீது விசாரணை நடத்தப்படுகிறது. மற்றபடி ஏதோ ஊழல் நடந்ததாகவும், அது நிரூபிக்கப்பட்டதுபோலவும் பேசுகின்றனர்.

இந்த விவகாரத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்தே ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ரபேல் போர் விமானம் தயாரிக்கும், டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக காங்.,கும், ராகுலும் மாறிவிட்டனர்.சில சமயங்களில் அந்த போட்டி நிறுவனங்களின் ஏஜென்ட் போலவே ராகுல் பேசுகிறார். சர்வதேச அளவில் நம் நாட்டின் பெயரை சீர்குலைக்கும் வகையில் காங்., செயல்பாடு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory