» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் 3 உயிர்களை பறித்த முகநூல் போலி காதல் : ப்ராங்க் செய்ய முயன்றதால் விபரீதம்!!

திங்கள் 5, ஜூலை 2021 12:23:23 PM (IST)

கேரளாவில் முகநூல் போலி காதல் விவசாரத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (24). இவரது கணவர் விஷ்ணு, வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருந்தது. இந்நிலையில், ரேஷ்மா மீண்டும் கருவுற்றார். அந்த மகிழ்ச்சி செய்தியை கணவரிடம் சொல்ல இருந்த நிலையில்தான், முகநூலில் ஆனந்த் என்ற பெயரில் நட்பு வேண்டுகோள் அவருக்கு வந்தது. 

ஆனால் அது நிஜத்தில் ஆண் அல்ல. தனது உறவினர்கள்தான் தன்னிடம் விளையாடுகின்றனர் என தெரியா மல் அவர்களது வலையில் விழுந் திருக்கிறார் ரேஷ்மா. ஒருகட்டத்தில், அந்த நேரில் பார்க்காத நபர் மீது காதல் வயப்பட்ட அவர், தான் ஏற்கெனவே ஒரு குழந்தைக்கு தாயாக இருப் பதையும், இப்போது இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமப் பதையும் கூறியிருக்கிறார்.

உடனே அந்தக் காதலன், ‘‘ஒரு குழந்தையுடன் வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்ள முடியும்’’ என சொல்லியிருக்கிறார். புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரேஷ்மாவும், தான் கருவுற்று இருப்பதை தன் கணவர் விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கூறவில்லை. இதனிடையே, விஷ்ணு மீண்டும் வளைகுடா சென்றார். இதனால் வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்த ரேஷ்மா, குழந்தையை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது. அதன்பின், குழந்தையை தூக்கி வீசியது யார் எனக் கண்டுபிடிக்க அப்பகுதியில் இருந்த இளம்பெண்கள் பலருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில், ரேஷ்மாதான் அந்தக் குழந்தையின் தாய் எனக் கண்டு பிடிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, அவர்கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், முகநூல் காதல் விவகாரங்களை ரேஷ்மா கூறியுள்ளார்.

பின்னர், சைபர் கிரைம் உதவியுடன் போலீஸார் துப்புதுலக்கிய போது, ரேஷ்மாவிடம் முகநூலில் பேசியிருப்பது அவரது உறவினர் ஆர்யாவும் (23), கரீஷ்மா (22) என்ற பெண்ணும் தான் என்பது தெரிய வந்தது. ரேஷ்மாவை ப்ராங்க் செய்வதற்காக அவர்கள் இவ்வாறு நாடகமாடி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்து பயந்துபோன ஆர்யாவும், கரீஷ்மாவும் ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். முகநூல் மூலம் ப்ராங்க் செய்வதாக தொடங்கிய இந்த விவகாரம், மூன்று உயிர்களை பறித்தது கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory