» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி, மகாராஷ்டிராவில் கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு: 3வது அலை தொடங்கி விட்டதா?

திங்கள் 5, ஜூலை 2021 5:15:14 PM (IST)

டெல்லி, மகாராஷ்டிராவில் கரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால், 3வது அலை தொடங்கி விட்டதா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கரோனா  2-வது அலையின் தாக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால் 3-வது அலைக்கான சில அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில், நோய் தொற்று சரிந்து வந்த சில இடங்களில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. முதல் அலையிலும், 2-வது அலையிலும் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

இந்த மாநிலங்களில் நோய் தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிராவில்  நேற்று 371 பேர் உயிரிழந்தனர். அதேபோல கேரளாவில் 135 பேரும், தமிழ்நாட்டில் 115 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.டெல்லியை பொறுத்த வரை நேற்று முன்தினம் உயிரிழப்பு 5 ஆக இருந்தது, அது 7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல புதிய நோய் தொற்று நேற்று முன்தினம் 86 ஆக இருந்தது. அது 94 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரிப்பதும் 3-வது அலையின் அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்  கரோனா  தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு ஒரு சதுர மீட்டருக்கு 2.5 என்ற அளவில் உள்ளது. எனவே 3-வது அலை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். டெல்லியில் இதுவரை 24 ஆயிரத்து 995 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 25 ஆயிரத்தை தொடுவதற்கு இன்னும் 5 எண்ணிக்கைதான் உள்ளது. 3-வது அலை டெல்லியை கடுமையாக தாக்கலாம் என்று கூறப்படுவதால் அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில்  கரோனா  மரணம் நேற்று 955 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் 738 பேர் மட்டுமே இறந்தனர். அந்த உயிரிழப்பும் அதிகரித்து இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory