» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகா, கோவா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் : குடியரசுத் தலைவர் உத்தரவு

செவ்வாய் 6, ஜூலை 2021 4:57:56 PM (IST)

கோவா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவா, திரிபுரா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகம், மிசோரம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (6-7-2021) உத்தரவிட்டார். புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:

கர்நாடக ஆளுநராக தாவர்சந்த் கெலாட்

மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு கம்மபதி,

மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக மங்குபாய் படேல்,

இமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ஸ்ரீதரன்பிள்ளை கோவா ஆளுநராகவும்,

ஹரியாணா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும்,

திரிபுரா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ரமேஷ் பைஸ் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும்,

இமாச்சல் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக  குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory