» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசம்: மது விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு திட்டம்

வியாழன் 8, ஜூலை 2021 5:20:38 PM (IST)

கரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு புதுவிதமான யுக்தியை கையில் எடுக்கிறது.

பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும். தமிழகத்தில் டிவி, மிக்சி, மின்விசிறி, ஆடுகள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் தெலுங்கானா அரசு வித்தியாசமான முயற்சியை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மதுபானங்களை இலவசமாக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க இந்த வழியை கையில் எடுக்கிறார்கள். மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்கப்படும்.இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன் பின்னர் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory