» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

வெள்ளி 9, ஜூலை 2021 5:09:31 PM (IST)

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் கரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில்,நாட்டில் உள்ள 90 மாவட்டங்களிலிருந்து 80 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதில், கேரளம், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இருப்பினும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த வாரம் புதிதாக பதிவாகும் பாதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், குணமடைவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா இரண்டாம் அலையை தற்போது வரை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டன், ரஷியா நாடுகளை போல் மீண்டும் கரோனா பரவாமல் இருக்க தொடர்சியாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory