» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து: திரையரங்குகளை திறக்க அனுமதி

சனி 10, ஜூலை 2021 12:40:07 PM (IST)

பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து இரவு நேர மற்றும் வார இறுதி பொதுமுடக்கங்கள் ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகளாக, உள்ளரங்கில் 100 பேர் மற்றும் வெளியரங்கில் 200 பேருடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் உள்பட அனைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory