» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பழங்குடி மக்களுடன் 2வது தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: தெலங்கான ஆளுநர் தமிழிசை

சனி 10, ஜூலை 2021 3:46:12 PM (IST)பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அங்கு சென்று  என்னுடைய 2வது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள இருக்கிறேன் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4-ஆவது தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. தடுப்பூசி திருவிழா 100 மையங்களில் நடைபெற உள்ளது. இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், புதுவை மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நான்காவது முறையாக தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. 

புதுச்சேரியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மக்களிடம் தயக்கம் நீங்கி இருக்கிறது. புதுச்சேரியில் நேற்று முதல் கர்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. புதுச்சேரியில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம், அதன் மூலம் மழை நீரை சேமிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு குறித்து, ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது, இருப்பினும் ஆரோக்கியமான ஆலோசனை வழங்குவேன். நாளை மறுநாள், நான் தெலங்கான மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மக்களுடன், என்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள இருக்கிறேன். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அங்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்கிறேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory